அம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிவில் நிர்வாக நடவடிக்கைகள் என்பனவற்றை முன்னெடுப்பது தொடர்பாக அம்பாரை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.சீ. பைசல் காசிம் ஆகியோரிற்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு மல்வத்தை 24 ஆவது இராணுவப் படைப்பிரிவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முஸ்லிம் மக்கள் என்றும் தயராகவுள்ளதாகவும் எமது மாவட்டத்தில் சிவில் நிர்வாகம் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாத வகையில் முன்னெடுக்க பாதுகாப்புத் தரப்பினரின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் தெரிவித்தார்.
அத்துடன், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இடம்பெறும் விடயங்களுக்கு முஸ்லிம் மக்கள் எதிராகவும், இன்று காணப்படும் தீவிராவாத குழுவினரை முற்றாக நாட்டிலிருந்து ஒழிக்க முஸ்லிம் சமூகம் பாதுகாப்பு படையினருடன் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நான் மக்கள் பிரதிநி என்ற வகையில் உறுதியளிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் இதன்போது தெரிவித்தார்.
இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எம்.எம். அன்சார், அம்பாரை மாவட்ட நல்லிணக்குழுவின் உறுப்பினரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான எம்.ஏ.எம். றசீன் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
ஊடகப் பிரிவு
No comments:
Post a Comment