ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன், சமகால அரசியல் நிலைவரம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்த முதல்கட்ட சந்திப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது, வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார முன்னேற்ற வேலைத்திட்டங்களுக்காக 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
Charles Ariyakumar Jaseeharan
No comments:
Post a Comment