மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டத்திட்டங்கள் குறித்து நீதிமன்ற தீர்ப்பொன்றை எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மொறட்டுவ, எகொடஉயன பகுதியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலை அவசரமாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையகம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்காக நீதிமன்றத்தின் வழிகாட்டல் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருகின்றமை குறித்து மஹிந்த அணி தொடர்ச்சியாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.
இந்த நிலையில் எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஜனாதிபதியினை மேற்கோள்காட்டி அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment