எம்.பஹ்த் ஜுனைட்
பலஸ்தீன நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (31) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான பலஸ்தீன் நாட்டுத் தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம்.எச் ஸைட் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்.
அவரது உரையில் பின்வருமாறு தெறிவித்தார் தான் சுமார் ஐந்து வருடமாக இலங்கையில் பணியாற்றுகிறேன், வாழ்கிறேன். எனக்கு மிகவும் கவலையாக இருப்பது என்னவென்றால் இலங்கையில் உள்ள உலமாக்களோ, இஸ்லாமிய அமைப்புக்களோ, மத்ரஸாக்களிலோ பலஸ்தீன அல் அக்ஸா பற்றி எந்தவொரு உணர்வும் இல்லை.
அல் அக்ஸா மஸ்ஜித் பலஸ்தீனர்களுடைய பூமி அதற்கான அவர்கள் போராடுகிறார்கள் என்று எங்கோ நடக்கும் ஒரு பிரச்சனைக்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.
அவ்வாறு அல்ல அல் அக்ஸா உலக உம்மத்துக்களின் முதல் கிப்லா உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்குமான புனித பூமி பலஸ்தீனர்கள் வெறும் பாதுகாவலர்கள் மட்டுமே எங்கள் பாதுகாப்பில் உள்ள உலக முஸ்லிம்களின் சொத்தாகிய அல் அக்ஸாவை உலகின் கடைசி உம்மத் இருக்கும் வரை பாதுகாப்போம்.
யூத சியோனிசவாதிகளின் ஆக்கிரமிப்பு நாளாந்தாம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பலஸ்தீன மக்கள் மீதான அநியாயம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது எங்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை.
இவ்வாறு பலஸ்தீன் பற்றியும் அல் அக்ஸா பற்றியும் பூரண தெளிவு இல்லாததாலே இவ்வாறான நிலை இலங்கையில் பலஸ்தீன் பற்றி பேசுங்கள் குறைந்த பட்சம் ஜும்ஆ தொழுகையிலும், ஐந்து நேர தொழுகையின் பின்னரும் அல் அக்ஸாவுக்காக, பலஸ்தீனத்திற்காக, உயிரை தியாகம் செய்து காக்கும் அல் அக்ஸா பாதுகாவலர்களுக்காக இறைவனிடம் பிராத்தியுங்கள் என கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் அன்சார் (நளீமி), முஸ்லிம் சமய கலாச்சார உத்தியோகத்தர் ஜுனைட் (நளீமி), நகர சபை உறுப்பினர் முபீன் மற்றும் சம்மேளனத்தின் தலைமைத்துவ உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர் என அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து தூதுவர் 1990 ம் வருடம் விடுதலை புலி பயங்கரவாதிகளினால் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திய மீரா ஜும்ஆ பள்ளிவாயலையும் பார்வைபிட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment