அப்துல் சலாம் யாசீம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அலுவலகம் மட்டக்களப்பு ஊரனி சதுக்கத்தில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பங்கேற்புடன் இடம் பெற்ற வைபவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜயசிறீ ஜயசேகர பிரதம அதிதியாக பங்கேற்று கட்சி அலுவலகத்தினை திறந்து வைத்தார்.
கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் காரியாலயங்கள் தற்பொழுது அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கும் போது கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்ப்பதற்கு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வளர்ச்சிக்காக அளப்பரிய சேவையை வழங்க வேண்டும் என தெரிவித்தே ஆளுநர் நியமனம் வழங்கப்பட்டதும் தெரிய வருகின்றது.
இதனடிப்படையில் எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிக வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நோக்குடன் கிழக்கு மாகாண ஆளுநர் இன மத சாதி பேதமின்றி தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
No comments:
Post a Comment