மதுபோதையால் ஏற்பட்ட விபரீதம் : உயிருடன் எரித்துக் கொலை - News View

About Us

About Us

Breaking

Monday, April 1, 2019

மதுபோதையால் ஏற்பட்ட விபரீதம் : உயிருடன் எரித்துக் கொலை

எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் தீயிட்டு கொழுத்தியதால் கருகிப்போய் உயிரிழந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் வீதியில் மதுபோதையில் இருந்த ஆண் ஒருவர் மீது மற்றொரு இளைஞன் பெற்றோல் ஊற்றி தீயிட்டு கொழுத்தியதால் தீப்பற்றி எரிந்து கருகிப்போய் உயிரிழந்த சடலமொன்று வீதியோரத்தில் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் வாழைச்சேனை விநாயகபுரத்தில் நேற்று (01)மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதுவே மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரோடு பெற்றோல் ஊற்றி எறித்த முதலாவது சம்பவமாக கருதப்படுகிறது.

இவ்வாறு எரிந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் கண்ணகிபுரத்தை சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான புகையிரதக் கடவை காவலாளியே என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாழைச்சேனை விநாயகபுரம் ஒன்பதாம் குறிச்சி வீதியில் மதுபோதையில் இருவருக்கிடையில் வாய்த்தர்க்கம், சண்டை ஏற்பட்டதையடுத்து 37 வயதுடைய ரஞ்சன் என்பவர் இவரை தாக்கி, பெற்றோல் ஊற்றி தீயிட்டுள்ளார். 
சம்பவதினமான திங்கட்கிழமை மாலை இவர் தப்பியோடியதையடுத்து பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வாழைச்சேனை பொலிசார் கைது செய்து சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்துள்ளார்கள்.

இவ்வாறு பெற்றோல் ஊற்றி தீயிட்டு கொழுத்திய சம்பவத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வாழைச்சேனை பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் மார்ச் மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமையே தடுப்புக்காவலில் இருந்து வெளியே வந்துள்ளார். தடுப்புக்காவலில் வந்த அடுத்தநாளே இக்கொலையை செய்துள்ளார்.

மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் ரஞ்சன் என்பவர் உயிரிழந்தவரை போத்தலால் குத்தியதுடன் அவரை பெற்றோல் ஊற்றி கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment