ரஷ்யாவின் 4 ஆவது மிகப்பெரிய செல்வந்தர் விமான விபத்தில் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

ரஷ்யாவின் 4 ஆவது மிகப்பெரிய செல்வந்தர் விமான விபத்தில் பலி

நேற்று முன்தினம் காணாமல்போன சிறிய ரக விமானத்தில் பயணித்த ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

ரஷ்ய தொழிலதிபரான நடாலியா பிலேவா (Natalia Fileva) மற்றும் இருவருடன், பிரான்ஸின் கேன்ஸ் பகுதியிலிருந்து நேற்று பயணித்த சிறிய ரக விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே ரேடரிலிருந்து மறைந்துள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியின் பிராங்புரூட்டிற்கு அண்மையில் குறித்த விமானம் வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

அதில் ரஷ்ய தொழிலதிபரும் ரஷ்யாவின் 4 ஆவது மிகப்பெரிய செல்வந்தருமான நடாலியா பிலேவா, அவரது தந்தை மற்றும் விமானி ஆகியோரின் உடல்கள், உடைந்த விமானத்தின் பாகங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் கறுப்புப் பெட்டி என்பன தொடர்பில் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment