நேபாளத்தின் கியால்சன் சிகரத்தை முதலில் எட்டி சாதனை படைத்த 3 வீரர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 10, 2019

நேபாளத்தின் கியால்சன் சிகரத்தை முதலில் எட்டி சாதனை படைத்த 3 வீரர்கள்

நேபாளத்தின் உயரமான சிகரங்களில் ஒன்றான கியால்சன் சிகரத்தின் உச்சியினை 3 மலையேறும் வீரர்கள் முதன்முறையாக எட்டி சாதனை படைத்துள்ளனர். 

உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபாளத்தில் அமைந்துள்ளது. உலகில் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்சுங்கா மலை, கிழக்கு சிக்கிமுடனான எல்லையில் அமைந்துள்ளது. 

இதேபோல் நேபாளத்தின் ஜுகால் ஹிமால் பகுதியில் கியால்சன் சிகரம் உள்ளது. இது 6,151 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த சிகரத்தின் உச்சியினை இதுவரை யாரும் அடைந்ததில்லை. 

இந்த மலையின் உச்சியினை எட்ட, கடந்த வெள்ளி அன்று 6 பேர் கொண்ட குழு பயணத்தை துவங்கினர். ஆனால், கால நிலைமாற்றத்தினால் மழை பெய்ததில், ஏறமுடியாமல் திணறிய 3 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். 
இதையடுத்து மாயா குருங், சர்மிளா தபா, மிலன் தமங் ஆகிய 3 மலையேறும் வீரர்களும் நேற்று முதன்முறையாக சிகரத்தின் உச்சியினை அடைந்து சாதனை படைத்துள்ளனர். 

இந்த சிகரத்தின் உச்சியில் மனிதர்களின் கால் தடம் பதிந்துள்ளது இதுவே முதன்முறையாகும் என ஜுகால் கிராமப்பகுதி அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் காத்மண்ட்டிலிருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் சிந்துபல்ஜோக் மாவட்டத்தில் உள்ள இந்த மலை, மலையேறும் வீரர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment