இந்தியாவின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட அபிநந்தன் தற்போது மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
உடற்தகுதி உறுதி செய்யப்பட்டதன் பின்னர், அதே பிரிவில் அவர் மீண்டும் இணைக்கப்படுவார் என இந்திய விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விருது இராணுவத்தில் மிக உயரிய பதவியில் இருக்கக்கூடிய, சாதனைகள் புரிந்த, எதிரியின் போரில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.
No comments:
Post a Comment