இலங்கை அரசு சார்பில் இலங்கை மத்திய வங்கி 2.4 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச முறியாக விடுவிக்கத் தயாராகியுள்ளது.
இதன் அடிப்படையில், 5 வருடங்களுக்கான சர்வதேச முறிக்காக ஒரு பில்லியன் டொலரும், 10 ஆண்டு காலப்பகுதிக்காக 1.4 பில்லியன் டொலரும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு சேவையை வழங்கும் Standard and Poor’s மற்றும் Fitch தரப்படுத்தல் என்பவற்றுக்கு அமைய இந்த முறிகளுக்கு B2 மற்றும் B ஆகிய தரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், 6.9 வீதத்தில் இருந்து 7.9 வீதம் வரையான அதிகளவான வட்டி வீதத்தில் இந்த முறிகளை விநியோகிக்கவுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய நாடுகள் மற்றும் உலகின் முன்னணி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருடன் இலங்கை இவ்வாறு அதிக வட்டி வீதத்தில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடியே காரணம் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment