சில அரச நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அமைச்சுகளின் கீழ் இதுவரையில் வழங்கப்படாதிருந்த சில அரச நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கும் வரும் வகையில், இதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் இதற்கு முன்னர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட ரன்மினிதென்ன மஹிந்த ராஜபக்ஸ சினிமா கிராமம், புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், தொலைத் தொடர்புகள், வௌிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment