போதைப் பொருள் விசாரணைகளுக்காக பங்களாதேஷ் சென்றுள்ள பொலிஸ் குழு - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

போதைப் பொருள் விசாரணைகளுக்காக பங்களாதேஷ் சென்றுள்ள பொலிஸ் குழு

தெஹிவளை - இரத்மலானை பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதத்திற்குள் கண்டறிந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழுவொன்று பங்களாதேஷுக்கு சென்றுள்ளது. பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரியொருவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பங்களாதேஷூக்கு பயணித்துள்ளனர்.

குறித்த போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பங்களாதேஷ் பிரஜைகள் ஐவர் பங்காளாதேஷில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளதுடன், நாட்டிலிருந்து அங்கு சென்ற விசேட குழு, தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

5 நாட்கள் பங்களாதேஷில் தங்கவுள்ள பொலிஸ் விசேட குழு, அந்நாட்டின் பொலிஸ் மா அதிபர் மற்றும் போதைப் பொருள் பிரிவின் தலைவரையும் சந்திக்கவுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பங்களாதேஷின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி 388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரொயினுடன் பங்களாதேஷ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். டிசம்பர் 31 ஆம் திகதி தெஹிவளையில் 278 கிலோகிராம் ஹெரொயினுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment