ஆப்கானிஸ்தான் துணை ஜனாதிபதி மீது தாக்குதல், இரண்டாவது தடவையாகவும் உயிர்பிழைத்தார் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 30, 2019

ஆப்கானிஸ்தான் துணை ஜனாதிபதி மீது தாக்குதல், இரண்டாவது தடவையாகவும் உயிர்பிழைத்தார்

ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டு துணை ஜனாதிபதி அப்துல் ரஷீத் டொஸ்டம் (Abdul Rashid Dostum) உயிர் பிழைத்துள்ளார். தாக்குதல்தாரிகள் பதுங்கியிருந்தே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்துல் ரஷீத்தின் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை தலிபான் கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது அப்துல் ரஷீத் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது உப ஜனாதிபதியான இவர், 2014ஆம் ஆண்டு இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

அதே வருடத்தில் காபுல் விமான நிலையத்தில் அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் முறியடிக்கப்பட்டிருந்தமை நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment