கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய மாணவி - News View

About Us

About Us

Breaking

Friday, March 8, 2019

கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய மாணவி

பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றில், கால்கள் இரண்டும் வெளியில் கட்டபட்டு தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை 05.45 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த யுவதி அதிகாலை 03 மணியளவில் எழும்பி கற்றல் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், பின்னர் யுவதியின் சகோதரி காலை எழும்பி வந்து பார்க்கும் போது தங்கை தூக்கில் தொங்கியவாரு இருந்ததை கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவிக்கபட்டுள்ளது. 
பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கலை பிரிவில் கல்வி பயின்றுவரும் 18 வயதுடைய முத்துமணி பிரியவர்ஸினி என்ற மாணவியே இவ்வாறு சடலமாக காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு வந்த பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதோடு சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கபட்டு விசாரணைகள் இடம்பெறற உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

யுவதியின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment