மன்னார், பேசாலை கடல் பகுதியில் கடற்படையினரால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 323.4 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர காவல் படகொன்றின் கடற்படையினர்களால் நேற்று (07) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது குறித்த புகையிலை கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் மேலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த புகையிலை 10 பொதியாக உள்ளது. இது இந்தியாவில் இருந்து கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுவதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது. குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment