98 வீடுகள் அடங்கிய மற்றுமொரு புதிய கிராமம் 24 ஆம் திகதி திறப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

98 வீடுகள் அடங்கிய மற்றுமொரு புதிய கிராமம் 24 ஆம் திகதி திறப்பு

இந்திய அரசின் உதவியுடன் நுவரெலியா கொத்மலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹெல்பொட மத்திய பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 98 வீடுகள் அடங்கிய புதிய கிராமம் எதிர்வரும் 24 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. 

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனையின் பேரில் இந்திய அரசாங்கத்தின் நிதி அன்பளிப்பில் ஹெல்பொட மத்திய பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 98 வீடுகள் அடங்கிய புதிய கிராமம் திறப்பு விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் ஹெல்பொட தமிழ் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சரின் பணிப்பின் பேரில் அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் எதிர்வரும் 24 ஆம் திகதி திறக்கப்பட உள்ள 98 வீடுகளுக்குமான உரிமையாளர்களை சந்தித்து அவர்களுக்கு திறப்பு விழா தொடர்பிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய ஏற்பாட்டு நிகழ்வுகள் தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டன. அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கேட்டறிந்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment