பெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீடு அரசியல் பிரவேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் - முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 9, 2019

பெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீடு அரசியல் பிரவேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் - முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்

அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி நிறையவே அறிந்தவள் நான். இன்று 25 வீத பெண்கள் அரசியல் பிரவேசம் சமுதாயத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு கல்முனையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் உரையாற்றுகையில் வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனம் தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கம் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி வேள்வி பெண்கள் அமைப்பு ஆகிய இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விழா கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜயவிக்கிரம கலந்து சிறப்பிக்க வட மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில் மேலும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

பெண்கள் அரசியலில் எதிர்கொள்ளும் சவால்களை நேரடியாக அனுபவித்துள்ளேன். நீங்கள் தற்பொழுது ஆரம்ப கட்ட அரசியல் பெண்களாக காணப்படுகின்றீர்கள். படிப்படியாக நாங்கள் வளர்ந்து எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை நிலை நிறுத்த ஒன்று படுவோம். 

இந்நிகழ்விற்காக வட மாகாணத்திலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருக்கின்றேன். ஆனால் இந்நிகழ்வை நான் தவறியிருந்திருந்தால் எனது அனுபவத்தின் ஒரு முக்கிய சந்தர்ப்பத்தை இழந்திருப்பேன் என நினைக்கின்றேன். 

ஏனெனில் இங்கு அமர்ந்திருக்கின்ற உறுப்பினர்கள் கட்சிகளை மறந்து இனங்களை மறந்து ஒரு ஐக்கியத்துடன் பயணத்தை ஆரம்பித்து இருக்கின்றீர்கள். இந்த சமிக்ஞையானது எமது நாட்டின் எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை உருவாக்குவதற்கு உதவும் என்றார்.

No comments:

Post a Comment