வடக்கில் நெசவுக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்து அதனூடாக வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தின் பணிப்பாளருமான சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தின் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்கள் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்சினையாகவுள்ளது.
இந்நிலையில் வடக்கில் நெசவுக் கைத்தொழிலை விருத்தி செய்து வேலை வாய்ப்புக்களைப் வழங்குவதன் மூலம் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
தொழில் துறைத் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் சிறிமோகன், தொழில் துறை திணைக்கள உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், நெசவாளர்கள் எனப் பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment