கொள்ளுப்பிட்டியில் இன்று (08) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் நால்வர் காயமடைந்ததைத் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி சந்தியில் அமைந்துள்ள கடையொன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதுடன், இதில் சீனப் பிரஜைகள் இருவர் மற்றும் கடை உரிமையாளர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின்போது 11 கடைகள் சேதமடைந்துள்ளன. எனினும், இந்த வெடிப்புச் சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையெனவும் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment