அன்மையில் விபத்துகுள்ளாகி மரணமடைந்த விரிவுரையாளர் வீட்டிற்கு கிழக்கு ஆளுநர் திடீர் விஜயம்! மனைவிற்கு இடமாற்றம்! - News View

About Us

About Us

Breaking

Saturday, February 2, 2019

அன்மையில் விபத்துகுள்ளாகி மரணமடைந்த விரிவுரையாளர் வீட்டிற்கு கிழக்கு ஆளுநர் திடீர் விஜயம்! மனைவிற்கு இடமாற்றம்!

அண்மையில் மட்டக்களப்பு குடியிருப்பு பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்த 49 வயதுடைய மட்டக்களப்பு அரசினர் கலாசாலையின் விரிவுரையாளர் க. கோமலேஸ்வரனின் வீட்டிற்கு இன்று கிழக்கு ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அவருடைய பிரிவால் வாடும் மனைவி, மகன், குடும்பத்திற்கு ஆளுநர் ஆறுதல் வார்த்தைகளை வழங்கினார்.

மேலும் மரணமடைந்த விரிவுரையாளரின் மனைவி வாழைச்சேனை கிண்ணையடியில் அமைந்துள்ள பாடசாலையில் ஆசிரியராக கடமை புரிகின்றார். அவரின் நன்மை கருதி கிழக்கு ஆளுனர் ஆசிரியர் வசிக்கும் செங்கலடி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு உடனடியாக இடமாற்றம் வழங்கும்படி மாகாண கல்வி பணிப்பாளருக்கு உத்திரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment