தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிலுள்ள கோணவில பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நால்வரை தங்கொட்டுவ பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கோனவில கிராமத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தங்கொட்டுவ நகரத்துக்கு அருகிலுள்ள கொடெல்ல, தம்பரவில மற்றும் எட்டியாவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களையே இது தொடர்பாக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் பேரில் மேற்படி சூதாட்ட இடத்தைப் பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
இதன்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்ததோடு, அங்கிருந்த ஒரு தொகைப் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment