ஒரு கிலோ ஹெரோயினுடன் கைதானவர் வீட்டில் மேலும் ஒன்பது கிலோ ஹெரோயின் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

ஒரு கிலோ ஹெரோயினுடன் கைதானவர் வீட்டில் மேலும் ஒன்பது கிலோ ஹெரோயின்

குளியாப்பிட்டி பிரதேசத்தில் ரூபா 12 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) இரவு குளியாப்பிட்டி, ஹொட்டிபொல வீதியின். கம்புராபொல சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கிலோ கிராம் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், குளியாப்பிட்டி, நாகொல்லாகொட, அம்பகஸ்கெதர விலாசத்தில் வசிக்கும், 27 வயதான சுபுன் சாமர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேக நபரின் வீட்டைப் பரிசோதனை செய்த போது அங்கிருந்து மேலும் 9 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதனடிப்படையில் கைப்பற்றப்பட்ட 10 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி ரூபா 12 கோடி (ரூ. 120மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment