இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் கிராமியப் பாடசாலைகளின் பெளதீக, மனித வளங்களை அபிவிருத்தி செய்ய சப்ரகமுவ மாகாண சபை முன்னுரிமை வழங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்தார்.
பெல்மதுளை போபிடிய வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஆசிரிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தமது உரையில் குறிப்பிட்டதாவது, நகர பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் கிராமிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் நகர பாடசாலைகளின் தரத்திற்கு கிராமிய பாடசாலைகளை கொண்டுவர இயலும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கிராமிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் நகர வாகன நெரிசல் குறைவதுடன் பெற்றோர்களுக்கு செலவினங்களும் குறைவதுடன் மாணவர்களுக்கு சுதந்திரமும் கிடைக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment