இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு, மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
நாளை (04) இடம்பெறவுள்ள இலங்கையின் 71வது தேசிய தினத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் பொருட்டு, வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி உள்ளிட்ட குழுவினர் இன்று (03) முற்பகல் 11.20 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
குறித்த குழுவினர் நாளை மறுதினம் (05) மீண்டும் நாடு திரும்பவுள்ளனர். இதேவேளை நாளை மறுதினம் (05) பிற்பகல் 2.30 மணியளவில், இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றிலும் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment