கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப்பத்திரங்கள் கொண்டுவரப்பட்டு வழங்கப்படாத நிலையிலும், சிறிய காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும் நீண்ட நாட்களாக அந்த காணிகளில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதை ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் செயலகத்தில் காணி அமைச்சினுடைய செயலாளர், மாகாண காணி ஆணையாளர், அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற 15 ஆயிரம் வழங்கப்படாத காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் முடிவைந்தும் காரியாலங்களில் தேங்கிக் கிடக்கும் பத்திரங்கள் ஆகியவை அனைத்தும் பெப்ரவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் அதன் வேலைகளை பூர்த்தியாக்கும்படியும் 16ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மூன்று மாவட்டத்திற்கும் பிரித்து கையளிக்குமாறும் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் உத்தரவு பிறப்பித்தார்.
No comments:
Post a Comment