ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகால் அமைப்பு மற்றும் உயர்கல்வி அமைச்சருமான கௌரவ. ரஊப் ஹகீம் அவர்களது பணிப்புரையின் பேரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் அவர்களது வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினை மீள புணரமைப்பு செய்து கட்சியினை வலுப்படுத்தும் முகமாக கடந்த சில வாரங்களாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியளாளர் சிப்லி பாறூக் அவர்களால் இச் செயற்றிட்டத்தின் கருப்பொருளான "வட்டாரக் கிளைகள்" அமைத்தல் நடவடிக்கைகள் முதற் கட்டமாக மண்முனைப்பற்று, காத்தான்குடி, மண்முனை வடக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது.
நேற்று (02.02.2019) உத்தியோகபூர்வமாக அந்தந்த வட்டார கிளைகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களும் அதனுடன் சேர்ந்து இளைஞர் காங்கிரஸ் மற்றும் மகளிர் காங்கிரஸ் அமைப்புக்களுக்கான விண்ணப்பங்களும் அந்தந்த வட்டார அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த வகையில் அபிவிருத்தி பணிகள், வாழ்வாதாரம், தொழில் வாய்ப்புக்கள் போன்ற கட்சியினுடைய செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் அந்தந்த வட்டாரக்கிளைகள் பொறுப்பாக இருக்கும் என்றும் வட்டாரக்கிளைகளுக்கான மத்திய குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு வட்டாரக் கிளை உறுப்பினர்களில் இருந்தும் தெரிவு செய்யப்படுவார்கள்.
இது தொடர்பான திடமான வழிகாட்டுதல்களை கட்சியின் தேசிய தலைவர் அனைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கும் வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில் வட்டார ரீதியான கூட்டங்கள் கூட்டப்பட்டு அதனுடைய தலைவர், செயலாளர், பொருளாளர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நியமனங்கள் உத்தியோகபூர்வமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியளாளர் சிப்லி பாறூக் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment