இந்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சோள அறுவடை இடம்பெறும்வரை சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க மாட்டேன் என விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.
ஒரு கிலோ சோளத்தின் ஆகக்குறைந்த விலை 45 ரூபாவென தெரிவித்த அமைச்சர், படைப்புழுவின் பாதிப்புக்குள்ளான சோளத்தை கொள்வனவு செய்யும் வியாபார நிறுவனங்களுக்கு எதிராக கடும் தண்டனை விதிக்கப்படுமென்றும் கூறினார்.
படைப்புழு தாக்கத்தால் இடம்பெற்றுள்ள சேதம் தற்போது மாவட்ட மட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை கிடைத்தவுடன் இரண்டு வாரங்களில் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்காக அதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியுள்ளதுடன் தற்போது படைப்புழு தாக்கம் பெருமளவு குறைவடைந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment