கடந்த 8 வருடங்களில், வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காகச் சென்று பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தோரின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளதாக பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வெளிநாடுகளுக்கு தொழில் நிமிர்த்தமாகச் சென்று அங்கு துன்பங்களை அனுபவிப்போரின் எண்ணிக்கை தற்போது பாரியளவு குறைவடைந்துள்ளது.
வெளிநாடுகளில் துன்பங்களுக்கு முகம்கொடுக்கும், இலங்கையர்களை காப்புறுதித் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இது தொடர்பில், அரசாங்கம் எனும் ரீதியில் நாம் அனைத்து விதமான செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம். இதற்காக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் நாம் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்.
2010 இல் இருந்து, மத்திய கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இலங்கையைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்களின் பிரச்சினையை நாம் ஆராய்ந்து தீர்வுகளையும் நாம் முன்வைத்துள்ளோம்.
இதனால், 2018 ஆம் ஆண்டில் 2 ஆயிரமாக குறைவடைந்துள்ளது. எம்மைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே பிரதான நோக்கமாகும்” என மனுஷ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment