மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஓட்டமாவடி கோட்டப்பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பிரதேசத்தின் மூத்த கல்விமான் மற்றும் பிரதேசத்தின் முதலாவது பொது வைத்திய நிபுணர் ஆகியோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அமீர் அலி பவுண்டேசனின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் கடந்த 01.02.2019ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அமீர் அலி பவுண்டேசனின் தலைவரும் இராஜங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஓய்வு பெற்ற கோட்டக்கல்வியதிகாரி கலாபூசணம் ஏ.எம்.ஏ.காதர் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் சிரேஸ்ட பதிவாளர் Dr.எஸ்.அஹமட் பரீட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஓட்டமாவடி கோட்டப்பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நூற்றியெட்டு (108) மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த நாற்பத்தாறு (46) ஆசிரியர்களும், மூத்த கல்விமான் கலாபூசணம் ஏ.எம்.ஏ.காதர் மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தின் முதலாவது பொது வைத்திய நிபுனரும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் சிரேஸ்ட பதிவாளர் Dr.எஸ்.அஹமட் பரீட் ஆகியோர் அதிதிகளால் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் சேவையைப் பாராட்டி ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஈ.எல்.மஹ்றுப்பினால் இராஜாங்க அமைச்சருக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment