கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை இஸ்லாமிய தஃவா நிலையத்தில் இயங்கிவரும் அல் மத்ரஸதுன்நூர் குர்ஆன் கலாசாலையின் ஆறாவது மாணவர் வெளியேற்று விழாவும் கலை நிகழ்ச்சியும் நேற்று (2) ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கலாசாலையின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும் எழுத்தாளருமான எஸ்.எச்.எம்.அறபாத் (ஸஹ்வி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவ, மாணவிகளின் இஸ்லாமிய கலை நிகழ்சிகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி அவர்கள் கலந்து கொண்டதோடு கெளரவ அதிதியாக கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிருவாகத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் கலாசாலையின் அதிபருமாகிய ஏ.ஹபீப் காசிமி கலந்து கொண்டார்.
ஏனைய அதிதிகளாக பைத் ட்ரவல்ஸ் உரிமையாளர் எம்.எம்.அபூபக்கர், மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம், முஜாஹித் மோட்டர்ஸ் உரிமையாளர் ரீ.எச்.தாசிம், முஸ்லிம் எயிட் ஓட்டமாவடிக் கிளையின் முகாமையாளர் ஜே.எம்.இம்தியாஸ், மாவடிச்சேனை கிராம சக்தி மக்கள் சங்கத்தின் தலைவர் எம்.பீ.எம்.முபீன், மெளலவி எச்.எல்.எம்.நசீர் (மன்பஈ) மற்றும் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இக் கலாசாலையிலிருந்து வெளியேறும் மாணவ மாணவிகளுக்கு அதிதிகளால் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment