ரிதிதென்ன பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அப்பிரதேச விவசாயிகளை சந்தித்தார் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 2, 2019

ரிதிதென்ன பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அப்பிரதேச விவசாயிகளை சந்தித்தார்

இன்று காலை ரிதிதென்ன பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அப்பிரதேச விவசாயிகளை சந்தித்தார். 

மேலும், கிழக்கு ஆளுநர் அவர்கள் சோளன் பயிரிடப்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயத்தில் புதிய சவாலாக ஏற்பட்டுள்ள "சேனா" என்கின்ற புழு வகை தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்தனர். 

இது தொடர்பாக எதிர்வரும் வாரம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்களோடு கலந்துரையாடி தீர்வை பெற்றுதரவுள்ளதாக அப்பிரதேச விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

இந் சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர் தாஹிர் அவர்களும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment