'மக்கள் அரசியலமைப்புப் பற்றி ஆராய்வது மிக நல்லது என்று கூறுகிறார் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன.
கேள்வி: புதிய அரசியலமைப்பின் தேவை பற்றி தெளிவுபடுத்துவீர்களா?
பதில்: 1978ம் ஆண்டு அரசியலமைப்பிலுள்ள முக்கிய பிரச்சினை அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் ஜனாதிபதியின் கீழேயே வந்துள்ளதாகும். ஜே.ஆர்.ஜயவர்தன இந்த அரசியலமைப்பைக் கொண்டுவந்த வேளையில், சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் "தற்போது தயாரிக்கப்படுவது நாட்டுக்கு, மக்களுக்கு மற்றும் பாராளுமன்றத்துக்கும் மேலே இருக்கும் வகையில் அதிகாரமுள்ள ஒருவரை நியமிப்பதாகும்" எனக் கூறினார். அது தற்போது உண்மையாகியுள்ளது.
இனப்பிரச்சினை உள்ளதென 1977ம் ஆண்டு தேர்தலின் போது ஏற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் அந்தப் பிரச்சினையை முற்றாக மறந்து விட்டது. 40 வருடங்களுக்குப் பின்னரும் அதன் பலனை அனுபவிக்கின்றோம். இந்த அரசியலமைபின் பின்னரே தேசியப் பிரச்சினைகள் அதிகரித்தன.
இலங்கையிலுள்ளது உலகிலேயே உள்ள சக்தி வாய்ந்த அரசியலமைப்பு என்பதில் சந்தேகமில்லை. அதில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு எல்லைப்படுத்தப்பட்ட பழைய உரிமைகள் அத்தியாயமே உள்ளது. இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் சமூக பொருளாதாரம், சூழல் உரிமைகள் என்பன உள்ளடக்கப்பட்ட விரிவான அடிப்படை உரிமை அத்தியாயம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறைபற்றிய பிரச்சினைகளை நோக்கும் போது விகிதாசார முறையையே நான் ஆதரிக்கின்றேன். ஆனால் விருப்புவாக்கு முறையில் ஏற்பட்ட பிரச்சினைகளும் உள்ளன. இவையெல்லாவற்றையும் விட எமது அரசியலமைப்பில் மாற்ற வேண்டிய அத்தியாயங்களே அதிகமாக உள்ளன.
1978 அரசியலமைப்பிற்கு 5/6 பெரும்பான்மையைப் பெற்றாலும் வாக்குறுதியளித்தபடி ஐக்கிய தேசியக் கட்சி அரசியலமைப்பைத் தயாரிக்கவில்லை. ஆகவே புதிய அரசியலமைப்பைத் தயாரித்து மக்களின் வரத்தைப் பெறுவதே சிறந்தது.
கேள்வி: சுயாட்சி அரசியலமைப்பொன்றை கொண்டு வரவுள்ளதாக குற்றச்சாட்டு உண்டல்லவா?
பதில்: இந்தப் பிரச்சினைக்கு பதில் கூறுவதற்கு முன்னர் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும். எமது கைகளில் இரண்டு ஆவணங்கள் உள்ளன. செயற்பாட்டுக்குழுவின் இடைக்கால அறிக்கையும் ஆறு உப குழுக்களின் அறிக்கையும். இவை சட்டவாக்க வடிவில் இல்லை. அறிக்கை வடிவிலேயே உள்ளன.
சட்டவாக்க வடிவில் உள்ள ஒரே அறிக்கை மகிந்த சமரசிங்க தலைமையில் தயாரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் அத்தியாயமாகும். இந்த அறிக்கையின் சட்டவாக்க ரீதியின் அவசியத்தை விசேடமாகத் தெரிவித்தவர் ஜனாதிபதி ஆவார். அரசியலமைப்பு சபைக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவால் இடைக்கால அறிக்கையினதும் உபகுழுவினதும் 6 அறிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு சட்டரீதியான அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அடிப்படைச் சட்டம் என்பது அரசியலமைப்பாகும். சுயாட்சி கொண்ட இராச்சியத்தில் அரசுரிமை பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் அமெரிக்காவாகும். அமெரிக்காவில் பலம் வாய்ந்த மத்திய அரசாங்கமும் பலமான 50 பிரிவுகளும் உள்ளன. அந்த 50 பிரிவுகளை பிராந்தியம் என அழைக்கின்றார்கள்.
மத்திய அரசியலமைப்பின் விருப்பமும் பிராந்தியங்களின் அதிகாரத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லாவிட்டாலும், அரசியலமைப்பின் எந்தவொரு சட்டத்தையும் மாற்றம் செய்ய முடியாது. அதாவது அனைத்து அமெரிக்க மக்களுக்கும் போன்று அந்தந்த பிராந்திய மக்களுக்கும் அரசுரிமை அதிகாரம் பிரிந்து சென்றுள்ளது. அதுதான் அரசியலமைப்பின் அதிகபட்ச அதிகாரமாகும்.
கேள்வி: ஒரு சாரார் தனிநபரிடம் நாட்டின் முடிவு எடுக்கும் உரிமை இருக்க வேண்டும் என கூறுகிறார்களே?
பதில்: நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை நல்லதா, இல்லையா என 40 வருடங்களுக்குப் பின்னர் விவாதிப்பதில் எவ்விதப் பயனுமில்லை. இந்த 40 வருட காலத்திலும் தேர்தல்களின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்பதாகும். எமது சமூகம் பல இன்னங்களைக் கொண்டது. பல இன பிரிவினர்கள் இருக்குமிடத்தில் தனிநபர் முடிவெடுப்பதை விட ஒன்றாக இணைந்து முடிவெடுக்கும் முறையே சிறந்தது. அவ்வாறான முறை பாராளுமன்ற முறையாகும்.
கேள்வி: நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது ஏன் அரசியலமைப்பைப் பற்றி இவ்வாறு அக்கறை காண்பிக்கின்றார்கள்?
பதில்: கடந்த ஐம்பத்திரண்டு நாட்கள் பிரச்சினை அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டே ஏற்பட்டது. அப்பிரச்சினை காரணமாக இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கவில்லை. உல்லாசப் பயணத்துறை வீழ்ச்சியடைந்தது. காரியாலயங்களில் பணிகள் நடைபெறவில்லை. எல்லாவற்றிற்கும் அரசியலமைப்பே காரணமாகும். நாட்டின் அடிப்படைச் சட்டத்தில் பாரிய பிரச்சினை இருக்குமானால் ஏனைய பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது?
கேள்வி: சில நாடுகளில் எழுதப்படாத அரசியலமைப்புக் காணப்பட்டாலும் எவ்விதப் பிரச்சினையுமில்லை. எமது நாட்டில் எழுத்துமூல அரசியலமைப்புக் காணப்பட்டும் ஏன் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
பதில்: எமது அரசியல் கலாசாரம் அவ்வளவு முன்னேற்றதமடையவில்லை. வளர்ச்சியடைந்த அநேக நாடுகளிலும் இந்தப் பிரச்சினைகள் உள்ளன. 19வது திருத்தத்தில் ஏற்பட்ட நீதிமன்ற சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்ட விதத்தை நாம் கண்டோம். வளர்ச்சியடைந்த அநேகமான நாடுகளில் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயல்படுவதில்லை.
அதனால் மக்கள் ஒருவித அடிமைத் தன்மையுடனேயே காணப்படுகின்றார்கள். எமது நாட்டில் ஜனநாயக உரிமைகள் காணப்படுகின்றன. எமது நாட்டில் ஜனநாயகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.அனைவரும் அரசியலமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது நல்லதல்லவா?
ரசிகா ஹேமமாலி (ரெஸ)
No comments:
Post a Comment