மினுவாங்கொடை - நீர்கொழும்பு கல்வி வலயங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட 2018/2019 ஆம் ஆண்டுகளுக்கான அறிவுத்திறன் போட்டியில், கல்லொழுவை அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவிகள் அணி, இரண்டாம் இடத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை ஆகியன இணைந்து இந்த அறிவுத் திறன் போட்டி நிகழ்வை நடத்தியது.
போட்டியில் பங்கேற்ற மாணவிகளான எம்.என்.எப். பெளஸா, ஆர்.எஸ். ரீஸ்மா, எம்.என்.எப். ஸஹ்லா, எம்.எஸ்.ஏ. பாத்திமா, எம்.ஆர்.எப். அஸ்பா ஆகியோர், அல் - அமான் அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம், பொறுப்பாசிரியை எப். மரிய தர்ஷினி ஆகியோருடன் காணப்படுகின்றனர்.
மினுவாங்கொடை நிருபர்
No comments:
Post a Comment