சபாநாயகர் கரு ஜயசூரிய கிளிநொச்சிக்கு விஜயம் - வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பத்தாயிரம் ரூபா - News View

About Us

About Us

Breaking

Thursday, January 3, 2019

சபாநாயகர் கரு ஜயசூரிய கிளிநொச்சிக்கு விஜயம் - வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பத்தாயிரம் ரூபா

சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று (03) கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். விசேட உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலகத்தில் வெள்ளம் அனர்த்தம் தொடர்பான நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார். 

இதன்போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீளவும் இயல்பு வாழ்க்கை தொடர்பிலும், அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் தொடர்பிலும் மாவட்ட அரச அதிபர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்டார். 

அத்துடன் வெள்ள நீர் வீடுகளுக்குள் சென்றிருந்தால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக அனைவருக்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அரச ஊழியர்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் விடயத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றும் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டிருந்தது. பத்தாயிரம் ரூபா கொடுப்பனவுக்கான பயனாளிகளை தெரிவு செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் வகையில் நேற்றைய தினம் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22,563 குடும்பங்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. 

அத்தோடு தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாவுக்கான காசேலைகளையும் வழங்கி வைத்த அவர், தேசிய சேமிப்பு வங்கியினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கற்றல் உபகரணங்களையும் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார். 

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே, விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், அமைச்சின் செயலாளர்கள் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, திணைக்களங்களின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கிளிநொச்சி நிபோஜன்

No comments:

Post a Comment