தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்தில் இருந்து இன்று (04) ஆண் சடலம் ஒன்று காலை 6.30 மணி அளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது நீர்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிஷாந்தன்
No comments:
Post a Comment