பாடசாலை பருவத்திலிருந்து கலப்பையுடனும் அரிவாளுடனும் பழக்கப்பட்ட விவசாயியின் மகன் நான் - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

பாடசாலை பருவத்திலிருந்து கலப்பையுடனும் அரிவாளுடனும் பழக்கப்பட்ட விவசாயியின் மகன் நான் - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

விவசாய சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளை நன்கு அறிந்தவன் என்ற வகையிலும் அது பற்றிய அனுபவமுள்ள தலைவர் என்ற வகையிலும் தனது முக்கிய நிகழ்ச்சித்திட்டமாக இருப்பது விவசாய சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதாகுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாடசாலை பருவத்திலிருந்து கலப்பையுடனும் அரிவாளுடனும் பழக்கப்பட்ட விவசாயியின் மகன் என்ற வகையில், நாட்டின் விவசாய சமூகத்தின் பிரச்சினைகளை நன்கு அறிவேன் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று (31) முற்பகல் பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“கொவி தாத்தா” (கமக்கார தந்தை) திரைப்படத்தின் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பண்டைய சூழல் நட்புடைய முறைமைகளிலிருந்து முழுமையாக விலகி இரசாயன உரப் பாவனையுடன் கூடிய நவீன விவசாய யுகத்தில் விவசாயிகளும் மக்களும் முகங்கொடுக்கும் வாழ்க்கை பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் தயாரிக்கப்படும் உலகின் முன்னணி ஆசிய விவசாயத்துறை திரைப்படமாக “கொவி தாத்தா” திரைப்படம் விளங்குகிறது.
உனகலா வெஹெர கிராமத்தில் பிரேமரத்ன திசாநாயக்க என்ற விவசாயியின் வாழ்க்கைச் சரித்திரத்தை “கொவி தாத்தா” என்ற பெயரில் அவரது மகன் தர்ஷன ருவன் திசாநாயக்கவினால் இவ்வாறு திரைப்படமாக்கப்படவுள்ளது.

“கொவி தாத்தா” திரைப்படத்தின் திரைக்கதை பிரதி அதன் தயாரிப்பாளர் சரத் பண்டார கொக்வேவவினால் ஜனாதிபதி அவர்கள் முன்னிலையில் பிரேமரத்ன திசாநாயக்கவின் மனைவியான பி.எம்.பிசோமெனிக்காவிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்களுக்கும் இதன்போது விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவி ஒருவரினால் இயற்றப்பட்ட பாடல்கள் சிலவும் ஜனாதிபதி கையளிக்கப்பட்டது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல உள்ளிட்ட அதிதிகளும், தர்ஷன ருவன் திசாநாயக்க உள்ளிட்ட தயாரிப்பு குழுவினரும் பிரேமரத்ன திசாநாயக்கவின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment