புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் - கிழக்கு ஹிஸ்புல்லா, மேல் மாகாணம் அசாத்சாலி - ஹிஸ்புல்லா எம்.பி. பதவியை இராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Friday, January 4, 2019

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் - கிழக்கு ஹிஸ்புல்லா, மேல் மாகாணம் அசாத்சாலி - ஹிஸ்புல்லா எம்.பி. பதவியை இராஜினாமா

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இவ்வைபத்தில் மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் பங்குபற்றியிருந்தார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவரது இடத்திற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு

கிழக்கு மாகாணம் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
மேல் மாகாணம் - அசாத் சாலி
மத்திய மாகாணம் - சத்தேந்திர மைத்ரி குணரத்ன
வடமத்திய மாகாணம் – சரத் ஏக்கநாயக்க
வடமேல் மாகாணம் - பேசல ஜயரத்ன பண்டார

No comments:

Post a Comment