முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 1, 2019

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று (01) விசாரணைக்கு வந்த போது, அவரை எதிர்வரும் 08ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர். 

இந்த விசாரணைகளுக்கு அமைவான இரசாயண பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை இதுவரை கிடைக்காமையின் காரணமாக சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். 

அதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 08ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டார். 

2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment