வெலிக்கடை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சார்ஜன்ட் சிறைச்சாலைக்குள் செல்லும் போது சந்தேகம் ஏற்பட்டதால் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 20 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சார்ஜன்டின் அலுவலக அலமாரியை சோதனையிட்ட போது, அதிலிருந்து 85 ஆயிரம் ரூபா பணமும், கையடக்கத் தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சார்ஜன்ட்டை மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment