ஐயாயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட கொடக்கவெல நிர்வாக கிராம உத்தியோகத்தர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரக்குவானை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து, கிராம உத்தியோகத்தர் இலஞ்சம் பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தகர் வெட்டிய மரங்களைக் கொண்டுசெல்ல அனுமதிப்பத்திரமொன்றை வழங்குவதற்காக இவ்வாறு இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.
கொடக்கவெல பிரதேச செயலாளர் அலுவலகத்தில் வைத்து இலஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டபோது கிராம உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தரை பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment