ஏற்றுமதித் துறையையும், சுற்றுலாத் துறையையும் முன்னேற்றி நாட்டிற்கு வெளிநாட்டுச் செலாவணியை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ்ஜில் நேற்று இடம்பெற்ற ஓக்கிட் பூங்காவை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரூபாவின் பெறுமதி குறையும் போது மக்களின் வாழ்க்கைச் செலவும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஓக்கிட் பூங்கா மூலம் சுற்றுலாத்துறைக்கு ஒரு புதிய எண்ணக்கரு முன்வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மேலும் கூறினார்.
இதேவேளை, அரச நிறுவனமாக இருந்த போதிலும் தனியார் துறையுடன் போட்டியிடக்கூடிய வகையில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அங்கு குறிப்பிட்டார்.
அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
அரசாங்க தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment