2019ம் ஆண்டில் மேலும் பல மருந்துப் பொருட்களின் விலையை குறைத்தல் மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களை வரையறை செய்தல் ஆகியன தனது முதன்மை வேலை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
புத்தாண்டில் தனது அமைச்சில் நேற்று கடமைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த வருடங்களில் 73 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டதாகவும், 2019ம் ஆண்டில் அதனை 100 ஆக அதிகரிப்பது தனது நோக்கம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையின் சுகாதாரத் துறையில் உலகம் முழுதும் பேசும் அளவுக்கு புரட்சியை கடந்த ஆண்டுகளில் ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எமது நாட்டில் நூற்றுக்கு 75 வீதமானோர் தொற்றா நோய் காரணமாகவே உயிரிழப்பதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
No comments:
Post a Comment