இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக கிழக்கு மாகாணத்திற்கு முதலாவது முஸ்லிம் ஆளுநர் பதவியினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு வழங்கியமை மகிழ்ச்சியளிக்கிறது என்று கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று (4) கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநர் பதவியினை கிழக்கில் பிறந்த மகனுக்கு அதுவும் முஸ்லிம் நபரொருவருக்கு வழங்கியமையிட்டு சிறுபான்மைச் சமூகம் குறிப்பாக நம் முஸ்லிம் சமூகம் பெருமைகொள்ள வேண்டும்.
இவ் ஆளுநர் பதவியானது கிழக்குவாழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதமாகும் அத்தோடு சிறுபான்மை மக்களின் கண்ணீர் துடைக்க ஒரு செயல்வீரனின் கையில் ஒப்படைக்கப்பட்ட உன்னதமான பொறுப்பாகும்.
இப்பதவி கிடைக்கப் பெற்றமைக்காக கிழக்குவாழ் மக்கள், எமது கல்குடாத் தொகுதி, ஓட்டமாவடி பிரதேச சபை, மற்றும் எமது பிரதேசத்தின் கழகங்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று உப தவிசாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment