பொருளாதார சிக்கல்களை சமாளிக்க வியாபார மத்தியஸ்தலங்களை வெளிநாடுகளுக்கு விற்க முயற்சி - அநுர பிரியதர்ஷன யாப்பா - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 2, 2019

பொருளாதார சிக்கல்களை சமாளிக்க வியாபார மத்தியஸ்தலங்களை வெளிநாடுகளுக்கு விற்க முயற்சி - அநுர பிரியதர்ஷன யாப்பா

பொருளாதார சிக்கல்களை சமாளிக்க வியாபார மத்தியஸ்தலங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”2019 ஆம் ஆண்டானது தேர்தலுக்கான ஆண்டாகவே கருதப்படுகிறது. இன்று இந்த நாட்டில் இரண்டு தரப்பினர் காணப்படுகின்றனர். அதாவது மக்களுக்கு சார்பான தரப்பு மற்றும் மக்களுக்கு எதிரான தரப்பு என இரு வேறு தரப்பினர் உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று பெரும்பான்மையான அரசாங்கமொன்று இல்லை. இதனால், அவர்கள் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகள் வெறும் பிரசாரமாகவே, இருப்பதை எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது.

மேலும், இவ்வாண்டில் பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டால், சர்வதேச கடன் தொகையை மீள்செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ரூபாயின் பொறுமதி வீழ்ச்சியடைந்ததோடு, வரிகளும் அதிகரிக்கப்பட்டன.

இவ்வாறான செயற்பாடுகளினால் சிறிய மற்றும் மத்தியத்தர வர்த்தகத்தைச் சேர்ந்த வியாபாரிகளும், மக்களும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவற்றை நிவர்த்தி செய்ய ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏதேனும், நடவடிக்கைகளை இந்த வருடத்தில் எடுப்பார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கவில்லை. கிராமங்களை அபிவிருத்தி செய்வோம் என அவர்கள் கூறினாலும், அதற்கான நிதி கிடைக்குமா என்பது கூட சந்தேகம் தான்.

இந்த சிக்கலில் இருந்து மீள, துறைமுகங்கள் உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கவே ஐக்கிய தேசியக் கட்சி தற்போது முயற்சித்து வருகிறது. எனவே, இந்த வருடம் நாட்டுக்கு சவாலான ஒரு வருடமாகவே அமையப்போகிறது” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment