நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் 13 ஆம் திகதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக்க டி சில்வா இன்று இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், வட மாகாண முன்னாள் அமைச்சர்களான கே.சிவநேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வட மாகாண அமைச்சராக செயற்பட்ட பா.டெனீஸ்வரனை மீண்டும் அமைச்சர் பதவியில் அமர்த்துமாறு கடந்த வருடம் ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமுல்படுத்தாமைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment