வசதிக் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத் தொகையிலும் பார்க்க கூடுதலான தொகையை சட்டவிரோதமாக அறிவிடும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சின் செயலாளருக்கு இதற்கான ஆலோசனைகளை வழங்கியிருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசதிக் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத்தை அறிவிடும்பொழுது இதற்கு தேசிய பாடசாலையாயின் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண பாடசாலையாயின் மாகாண கல்விச் செயலாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வவாறு இல்லாத பட்சத்தில் தமது விருப்பத்திற்கமைவாக சுற்றறிக்கையை மீறிய வகையில் பாடசாலை அதிபர்கள் கட்டணங்களை அறிவிட முடியாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகளை 1998 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் ஊடாக கல்வி அமைச்சுக்குக்கு பொதுமக்களால் அறிவிக்க முடியும்.
அரச தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment