மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் கிழக்கு ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை கிழக்கு ஆளுநர் செயலகத்தில் நேற்று சந்தித்தார்.
பாடசாலை எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடியதோடு அதற்கான தீர்வு திட்டம் தொடர்பாக பேசப்பட்டது.
மேலும் அப்பகுதியை சேர்ந்த மூன்று பாடசாலைகளை உடனடியாக தரமுயர்த்துவற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாகாண கல்வி பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார் .
மேலும் பின்தங்கிய பாடசாலைகளுக்குரிய சகல உதவிகளை வழங்குவதாக கிழக்கு ஆளுநர் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் மன்சூர் அவர்களும் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment