இலங்கை கழக அணி வீரர் அக்ஷு ஆபத்தான நிலையில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 1, 2019

இலங்கை கழக அணி வீரர் அக்ஷு ஆபத்தான நிலையில்

இலங்கை முன்னாள் இளையோர் கிரிக்கெட் வீரரும், இலங்கையின் கழக அணியான ராகம கிரிக்கெட் கழகத்தின் வீரருமான அக்ஷு‌ பெர்னாண்டோ ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கல்கிசை கடற்கரை பகுதியில் பெர்ணாண்டோ சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ரயிலில் மோதியுள்ளார். இதனால் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆபத்தான நிலையில் பெர்னாண்டோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தகவல் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புனித பேதுரு கல்லூரி முன்னாள் மாணவனான பெர்னாண்டோ நியூசிலாந்தில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணிக்காக ஆடியுள்ளார். அவர் இதுவரை 39 முதல்தர போட்டிகளில் ஆடியுள்ளார்.

No comments:

Post a Comment