கோட்டாவுக்கு எதிரான வழக்கை விஷேட நீதாய மேல் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா? - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

கோட்டாவுக்கு எதிரான வழக்கை விஷேட நீதாய மேல் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா?

டி.ஏ ராஜபக்ஷ நூதனசாலை நிர்மாணம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசேட நீதிமன்றத்தில் விசாரணை செய்ய முடியுமா? என்பது தொடர்பான தீர்ப்பு பெப்ரவரி 11 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

விசேட நீதிமன்றத்தில் டி.ஏ ராஜபக்ஷ நூதனசாலை நிர்மாணம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்ய முடியுமா? என்பது தொடர்பான தீர்ப்பு பெப்ரவரி 11 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

டி.எ ராஜபக்ஷ நூதனசாலை தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசேட நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன்போது நூதனசாலை தொடர்பான வழக்கை விசேட நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாதெனக்கூறி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுதாபனத்துக்கு சொந்தமான நிதியை பயன்படுத்தி மெதமுல னவில் டி.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை மற்றும் ஞாபகார்த்த தூபி நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கே இன்று (31) விசேட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்சன டி சில்வா, முன்னாள் பொது முகாமையாளர் பத்ரா உதுலாவத்தி கமலதாச மற்றும் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சுதம்மிக்கா கெமிந்த ஆர்டிகல,சமன் குமார ஆப்ரஹாம் கலபத்தி,தேவகே மஹிந்த சாலிய மற்றும் சிறிமதி மல்லிகா குமாரி சேனாதீர ஆகியோரே கூட்டுதாபனத்துக்கு சொந்தமான பணத்தை மோசடி செய்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி வரையான காலப்பகுதிக்குள் காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுதாபனத்தின் நிர்மாணப்பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா நிதியும் இரண்டாம் கட்டமாக 2014 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி வரையான காலப் பகுதிக்குள் 5.98 மில்லியன் ரூபா நிதியும் செலவிடப்பட்டிருப்பதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment