தொழு நோயாளர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கு மேலானோர் மேல் மாகாணத்தில் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

தொழு நோயாளர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கு மேலானோர் மேல் மாகாணத்தில்

நாட்டில் மொத்த தொழு நோயாளர்களின் எண்ணிக்கை 1683 இவர்களில் 40 சதவீதத்திற்கு மேலானோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் புதிதாக ஆயிரத்து 600ற்கு மேற்பட்ட தொழு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். நோய் அறிகுறிகள் தோன்றி ஆறுமாதங்கள் தாமதித்து சிகிச்சைக்காக வந்தவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் என்று பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நோய் குறித்து மக்கள் மத்தியில் போதிய அறிவின்மை காரணமாக இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொழு நோய் பக்டீரியா நுண்ணுயிர் மூலம் பரவுவதாகவும். சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் இருந்து தொழு நோய் பரவ மாட்டாது. புதிய சிகிச்சைகள் மூலம் தொழு நோயை முற்றாக குணப்படுத்தலாம் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment